இந்த ஆண்டின் 2 வது புயல் உருவாக வாய்ப்பு.. வெளுக்கப்போகும் கனமழை.. பொதுமக்களே உஷார்!!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் செப்டம்பர்.3ம் தேதி வரை 6 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து, நாளை (ஆகஸ்ட் 30) காலை புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!! தொடர்கிறது சிறப்பு ரயில் சேவை..!! “தெற்கு ரயில்வே அறிவிப்பு”..!!
மேலும் , கடந்த மே மாதம் வங்க கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்தாண்டின் 2வது புயலாக இது உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























