அரசு பள்ளி மாணவர்களுக்கு வெறும் ரூ.10 ரூபாயில் முடித்திருத்தம் – குவியும் பாராட்டுக்கள்!
பள்ளிகள் திறக்கப்பட இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வெறும் ரூ.10 ரூபாயில் முடித்திருத்தம் செய்யும் பணி பொதுமக்களின் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது.
ரூ.10 ரூபாயில் முடித்திருத்தம்:
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதனால் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு வரும் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாள் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி திறப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும், பள்ளிகள் திறக்கப்பட இன்னும் சில நாட்களே இருப்பதால் பள்ளி மாணவர்கள் முடி திருத்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாகவே, அனைத்து முடி திருத்தம் செய்யும் கடைகளிலும் குறைந்தது ரூபாய் 100 முதல் 150 வரைக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த செலவில் முடி திருத்தம் செய்யும் பணியை புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் விஜய் என்பவர் செய்து வருகிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – மாத சம்பளம் ரூ.10,710 உயர வாய்ப்பு!
அதாவது, காலை 7:00 மணி முதல் காலை 10 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 10 ரூபாய் கட்டணத்தில் முடித்திருத்தம் செய்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்து வருகிறார். குறைந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யும் பணியை செய்வதால் பொதுமக்களின் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறார்.