மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – மாத சம்பளம் ரூ.10,710 உயர வாய்ப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - மாத சம்பளம் ரூ.10,710 உயர வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - மாத சம்பளம் ரூ.10,710 உயர வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – மாத சம்பளம் ரூ.10,710 உயர வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் வரைக்கும் உயர்த்தப்படும் எனவும், இதன் மூலமாக மாத சம்பளம் ரூபாய் 10,710 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போது 42 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதத்தில் மட்டுமே ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை 0.72 சதவீதம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக மூன்று முதல் நான்கு சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் – அன்பில் மகேஷ் அறிவிப்பு!

இவ்வாறு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி உயர்வு 46 சதவீதமாக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறலாம் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போல ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் வழங்கப்பட்டால் அகவிலைப்படி உயர்வின்படி ரூ.12,600 ஆக உயரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!