தீபாவளியொட்டி மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு – சவரன் ரூ.45,160க்கு விற்பனை!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தங்கத்தின் விலை உயர்ந்து சவரன் ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் ஆயுதபூஜைக்கு பிறகு தங்கத்தின் விலை அதிரடியாய் குறைந்து வந்தது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6085க்கும், சவரனுக்கு ரூ.48,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5615க்கும், சவரனுக்கு ரூ.44,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6115க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.48,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ. 5645க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தீபாவளிக்கு வங்கிகள் 6 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.76.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 80 காசுகள் அதிகரித்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.