இந்தியாவில் தீபாவளிக்கு வங்கிகள் 6 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
நாடு முழுவதும் நவ. 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
இந்திய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நவ.12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த மாதம் தீபாவளி தந்தேராஸ் மற்றும் பாய் தூஜ் ஆகிய பண்டிகைகள் வருவதால் பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
மேலும் இந்த வாரம் தீபாவளி, பைடூஜ், வாங்கலா திருவிழா, லக்ஷ்மி பூஜை, சாத், கர்வா சௌத் என முக்கியமான பண்டிகைகள் வர இருக்கிறது. இந்த பண்டிகைகள் அடுத்தடுத்த நாட்களில் வர இருப்பதால் 6 நாட்கள் வங்கிகள் இயங்காது. நவம்பர் 10 வாங்கலா திருவிழா அதனால் மேகாலயா வங்கிகளுக்கு விடுமுறை. நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். நவம்பர் 12 ஞாயிறு பொதுவிடுமுறை ஆகும்.
TNPSC தேர்வுக்கு குறைவான விலையில் பயிற்சி வகுப்பா? உடனே Join பண்ணுங்க!!
நவம்பர் 13 கோவர்தன் பூஜை என்பதால் திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா இடங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை ஆகும். நவ. 14 குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தீபாவளி விடுமுறை ஆகும். நவ. 15 பைடூஜ் தினம் காரணமாக சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், வங்காளம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.