தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ. 45,560க்கு விற்பனை!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர துவங்கியுள்ளது.
தங்கத்தின் விலை:
ஆயுதபூஜைக்கு பின்னர் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 குறைந்து ரூ.6156க்கும், சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.49,248க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5686க்கும், சவரனுக்கு ரூ. 232 குறைந்து ரூ.45,488 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே, நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை – வானிலை மையம் அறிக்கை!!
அதாவது, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ.6165க்கும், சவரனுக்கு ரூ. 73 உயர்ந்து ரூ.49,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5695க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 70 காசுகள் உயர்ந்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.