நடைமுறைக்கு வரும் பொது சிவில் சட்டம் – இனி இதை பதிவு செய்வது கட்டாயம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளிக்குப் பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
பொது சிவில் சட்டம்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு சட்டசபையில் சிறப்பு தொடர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்கள் நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளது. அதில் சட்டம் வரையறை செய்யப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மசோதாவில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளது. அதாவது அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பாரம்பரிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.
விவாகரத்து, திருமணம், சொத்துரிமை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதோடு அண்மை காலமாக இரு தார திருமணம் மற்றும் பலதார திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2வது திருமணம் மற்றும் ‘லிவிங்’ வாழ்க்கை முறையை பதிவு செய்யும் வகையிலான சட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிகிறது.