அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸில் தொகை பிடித்தம்? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸில் தொகை பிடித்தம்? - உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸில் தொகை பிடித்தம்? - உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸில் தொகை பிடித்தம்? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் போனஸ் தொகையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு தொழிற்சங்க சந்தா தொகை பிடித்தம் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துள்ளது.

தீபாவளி போனஸ் தொகை பிடித்தம்:

தமிழக அரசு அனைத்து துறை சார்ந்த ஊழியர்களுக்கும் ஜூலை முதல் டிசம்பர் மாத வரையிலான அகவிலைப்படி உயர்வினை அக்டோபர் 27 ஆம் தேதி அன்று தீபாவளி போனசாக 20% வழங்குவது குறித்து அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் கோவையை சேர்ந்த நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் போக்குவரத்து கழகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒப்புதல் உடன் ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தீபாவளி பண்டிகை சமயத்தில் வழங்கப்பட்ட ஊழியர்களின் வருடாந்திர போனஸ்  தொகையிலும் தொழிற்சங்ககளுக்கான பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வரும் பொது சிவில் சட்டம் – இனி இதை பதிவு செய்வது கட்டாயம்!

எனவே ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வருடாந்திர போனஸ் தொகையில் பணம் பிடித்தம் செய்வதன் காரணமாக பண்டிகை சமயங்களில் ஊழியர்கள் கடன் வாங்கும் நிலை உள்ளது. இதனை அடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகம் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!