பண மழையில் அரசு ஊழியர்கள் – விரைவில் 8 வது ஊதிய குழு..வெளியான முக்கிய தகவல்!

0
பண மழையில் அரசு ஊழியர்கள் - விரைவில் 8 வது ஊதிய குழு..வெளியான முக்கிய தகவல்!
பண மழையில் அரசு ஊழியர்கள் - விரைவில் 8 வது ஊதிய குழு..வெளியான முக்கிய தகவல்!
பண மழையில் அரசு ஊழியர்கள் – விரைவில் 8 வது ஊதிய குழு..வெளியான முக்கிய தகவல்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 8 -வது ஊதிய குழு விரைவில் அமைக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளது. இதற்குரிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

8- வது ஊதிய குழு:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது 8-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி, ஊதியம் உள்ளிட்ட பிற பணபலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படியானது 46% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்ட மகிழ்ச்சியான அறிவிப்பாக ஊழியர்களுக்கான 8- வது குழு விரைவில் அமைக்கப்படும் என்ற தகவல்கள் வந்துள்ளது.

ஊழியர்களின் கோரிக்கையின் படி 8-வது ஊதியக்குழு அமல்படுத்தினால் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் வெகுவாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய குழுவானது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் 2026 ஆம் ஆண்டில் 8 – வது  ஊதியக்குழு நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!