தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் – தற்போதைய நிலை என்ன? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்தது. கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிக்கும் போது மனிதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீர் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்தது. கடந்த மாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தற்போது தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக கூறினார். மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.