119 வருட ரயில்வே வாரிய வரலாற்றில் முதல்முறை.. தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம்!!
இந்திய ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல்கள் உலா வந்தன. தற்போது அது தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எச்சரிக்கை மக்களே..! 8 மாவட்டங்களை குறிவைக்கும் மழை..!
அதாவது ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். வரும் செப்டம்பர்.1ஆம் தேதி அவர் தலைவராக பெறுப்பேற்கவுள்ளார்.


























