தமிழக அரசில் ரூ.30,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Centre Administrator, Senior Counsellor, IT Staff, Case Worker போன்ற பல்வேறு பணிகளுக்கு என மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் (DSW Madurai) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (10.11.2023) மட்டுமே மீதமுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- DSW நிறுவனத்தில் Centre Administrator, Senior Counsellor, IT Staff, Case Worker, Multipurpose Helper, Security Guard ஆகிய பணிகளுக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இப்பணிகளுக்கு 10ம் வகுப்பு, BSW, Graduate Degree, Diploma, Master Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- இந்த DSW நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.
- இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.6,400/- முதல் ரூ.30,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இந்த DSW நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
DSW விண்ணப்பிக்கும் விதம்:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (09.11.2023) தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இதோ எளிய வழி!