தமிழக மாவட்ட நீதிபதி தேர்வு ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மாவட்ட நீதிபதி தேர்வு ஒத்திவைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழக மாவட்ட நீதிபதி தேர்வு ஒத்திவைப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழக மாவட்ட நீதிபதி தேர்வு ஒத்திவைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையின் மாவட்ட நீதிபதி காலியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாவட்ட நீதிபதி தேர்வு:

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிபதிகளுக்கான 50 காலியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பெறப்பட்டது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்ற அல்லது அதற்கு இணையான வேறு தகுதிகளை கொண்ட, குறைந்தது ஏழு ஆண்டுகள் வழக்கறிஞர் பயிற்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நடத்தும் காய்ச்சல் முகாம்கள் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட நீதிபதிகள் தேர்வு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடக்க உள்ள தேர்வுக்கு புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!