தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் உள்ள மொத்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் கடந்த மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்த இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்றது. அதில் அந்தியூரில் பலவகை தொழில்நுட்ப கல்லூரி துவக்க அரசு முன்வருமா என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A.G.வெங்கடாசலம் கேள்வி எழுப்பினார். அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்: சவரனுக்கு ரூ. 160 உயர்வு!

அதில் அந்தியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி என இரண்டு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் சுமார் 1150 இடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 438 மாணவர்கள் மட்டும் தான் படிக்கின்றனர். அந்த இடங்கள் நிரப்பப்பட்ட பின் தேவைக்கு தகுந்தாற் போல கல்லூரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், பேசிய அவர் தமிழகத்தில் உள்ள உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6295 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் சுமார் 3184 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் அரசு தொழில்துறை 4.0 திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு உலகத்தரமிக்க திறன் பயிற்சி மையம் 120 கோடி பட்ஜெட்டில் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!