
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி என்று பங்குனி உத்திரப் பெருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தற்போது பங்குனி மாதம் என்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் அம்மன் கோவில் திருவிழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் திருவிழாக்களை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறைகளை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவானது வருகிற ஏப்ரல் 5ம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறையும் மாணவர் சேர்க்கை – அமைச்சர் முக்கிய தகவல்!
இந்த திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி அன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பில், தற்போது 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் மற்ற மாணவர்களுக்கான முக்கிய தேர்வுகளும் மற்றும் பொதுத்தேர்வுகளும் எந்தவித இடையூறு இல்லாமல் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download