தமிழகத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்: சவரனுக்கு ரூ. 160 உயர்வு!
தமிழகத்தில் தங்கம் விலையானது எதிர்பாராத உச்சத்தை நெருங்கி இருக்கிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 44, 480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலையானது அதிகரித்து எதிர்பாராத உச்சத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த சில நாட்களில் இருந்த விலை நிலவரத்துடன் ஒப்பிடும் போது தற்போது தங்கத்தின் மதிப்பு எகிறியுள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்திற்கு வரும் ரூ.5 கோடி மதிப்பில் “Boat house” – குஷியில் பொதுமக்கள்!
அதே போல ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 20 அதிகரித்து ரூ.5,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனோடு சேர்த்து வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் படி சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ. 75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download