கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் வைத்துளீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை!!
கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு:
வாடிக்கையாளர்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை பெற்றுவிட்டு ஆக்டிவேட் செய்த பிறகு பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இவ்வாறு, பயன்படுத்தாமல் இருந்தாலும் ஒரு சில அபாயங்கள் ஏற்படக்கூடும். அதாவது, நீண்ட நாட்களாக கிரெடிட் கார்டு பயன்படுத்தாத போது தானாகவே டீஆக்டிவேட் ஆகிவிடும். இதன் விளைவாக கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
தீபாவளிக்கு பின்னர் சென்னைக்கு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் – போக்குவரத்து துறை தகவல்!
மேலும், கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் இருக்கும் போது CUR மதிப்பெண் தானாகவே குறையும். இதன் மூலமாக எதிர்காலத்தில் லோன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். அதே நேரத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கார்டு உபயோகிக்கப்படாமல் இருந்தால் கிரெடிட் கார்டு வழங்குனர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யப்படலாம். இது போன்ற விளைவுகளில் இருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது சிறிய செலவுகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளவும்.