புதிய தொழில் தொடங்க அரசின் உதவி – மாவட்ட ஆட்சியர் தகவல்!
படித்த இளைஞர்கள் புதிய தொழிலை தொடங்குவதற்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார்.
புதிய தொழில்:
தமிழக அரசு சுயதொழில் தொடங்குவோர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் புதிய தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் புதிய செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி 2023 – 24 ஆம் ஆண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூபாய் 3 கோடியே 55 லட்சம் தொகையை இலக்கு நிர்ணயத்துள்ளது. இத்திட்டத்தின்படி ரூபாய் 10 லட்சம் முதல் ஐந்து கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் அரசு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தாமல் வைத்துளீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை!!
இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம், எந்திரம் போன்ற திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன், பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்தான மேலும் அதிக விபரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.