ஆவின் பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் – அவதியில் பொதுமக்கள்.. அரசுக்கு வைத்துள்ள முக்கிய கோரிக்கை!!
தமிழகத்தில் ஆவின் பச்சை பால் பாக்கெட்டின் விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால்:
தமிழகத்தில் , 1.5 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட், 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட பச்சை நிற பாக்கெட் என நான்கு வகையான ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பால் பாக்கெட்களை காட்டிலும் பச்சை பால் பாக்கெட் விலை குறைவாக லிட்டர் ரூ.44 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது – வானிலை மையம் அலர்ட்!
ஆனால், அதிக கொழுப்பு சத்து கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டை குறைவான விலைக்கு கொடுப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால், பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனையை நிறுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அவ்வாறு செய்தால் பெரும்பாலான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பச்சை நிற பால் பாக்கெட்டின் விற்பனையை நிறுத்த கூடாது என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.