தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது – வானிலை மையம் அலர்ட்!

0
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது - வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது - வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது – வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (நவ. 20) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ஜன.1 முதல் இது கட்டாயம் – தலைமை செயலாளர் அதிரடி!

அதே போல நாளை (நவ. 21) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும், நவ. 22 ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

அதனை தொடர்ந்து நவ. 23 மற்றும் நவ. 24 ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டம், மற்றும் கோயம்பத்தூர் மாவட்டத்தின் மழை பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை நவ 26 வரை நீட்டிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!