
தமிழகத்தில் மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50% இட ஒதுக்கீடு – சென்னை உயர்நீதிமன்றம் இடை கால தடை!
தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் அடுத்த கட்டமான குறிப்பிட்ட துறையில் சிறப்புமிக்க படிப்பை படிப்பதற்க்கு அரசு இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் ஊக்கம் பெற்று ஆர்வத்துடன் பயில இது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுபோன்று அனைத்து படைகளுக்கும் குறிப்பிட்ட பிரிபினருக்கு என்று இட ஒதுக்கீடுகளை அரசு வழங்கி வருகிறது. அரசு மருத்துவர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் சேருவதற்கும் தமிழக அரசு இது போல் முன்னதாக 50% இட ஒதுக்கீடை வழங்கியிருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், 2017ம் ஆண்டு முதல் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. அதனால், நடப்பாண்டும் இதை அளிக்க கூடாது என்றும், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால் திறமையாக தனியார் மருத்துவர்கள் பலர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு அளிப்பதை 10 நாட்கள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.