தமிழக பெண்களுக்கு குவைத்தில் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக பெண்களுக்கு குவைத்தில் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பெண்களுக்கு குவைத்தில் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பெண்களுக்கு குவைத்தில் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

குவைத் நாட்டில் பெண்களுக்கு மாதம் 32,000 ரூபாய் ஊதியத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் இருந்து பலரும் வெளிநாடுகளில் வேலை தேடி வருகின்றனர். கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் சில கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கு பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குவைத் நாட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம்!

அதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் தற்போது குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு 500 பெண் பணியாளா்கள் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம். ஆர்வமுள்ளவர்கள் சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

வேலை குறித்த விவரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ அல்லது 044-22505886, 044-22500417 என்ற தொலைபேசி எங்கள் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். அரபு நாடுகளில் வீட்டு பெண் பணியாளர்களாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 32,000 ரூபாயும், அனுபவம் இல்லாதவர்களுக்கு 29,500 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் அச்சுறுத்தல்! தலைமை செயலர் ஆலோசனை!

மேலும் மருத்துவப் பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர செலவுகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலையளிப்பவர் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்துகொள்ள நிா்வாக இயக்குநா், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார் ஆட்சியர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!