CBSE தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?? முக்கிய அப்டேட் இதோ!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளுக்கான தேதிகளை வரும் டிசம்பர் மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதுவார்கள் என்று சிபிஎஸ்இ வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து புதிய தகவல்..!! தமிழக அரசு விளக்கம்..!!
அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகளை நடத்த CBSE திட்டமிட்டுள்ளது. மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இறுதி தேர்வுக்கான மாதிரி தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மாதிரி தாள்களை CBSE வாரியத்தின் கல்வி இணையதளமான cbseacademic.nic.in-லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


























