விஜய் டிவி vs சன் டிவி டாப் 5 சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 44வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
TRP பட்டியல்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் சன் டிவியில் கயல் சீரியல் 10.85 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வானத்தை போல சீரியல் 10.72 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பெண்ணே சீரியல் 10.67 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், எதிர்நீச்சல் சீரியல் 9.99 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், சுந்தரி சீரியல் 9.94 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
செழியனை பிரிந்த ஜெனி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
அதே போல விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் 7.87 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாக்கியலட்சுமி சீரியல் 7.08 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.71 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ஆஹா கல்யாணம் சீரியல் 6.40 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், மகாநதி சீரியல் 5.24 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.