செழியனை பிரிந்த ஜெனி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு ஒரு பக்கம் தொழில் முடங்கிவிட மறுபக்கம் செழியன் பிரச்சனை வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு கேன்டீன் ஆர்டர் கைவிட்டு போனது. அதனால் அவருக்கு ஏகப்பட்ட பண கஷ்டம் வருகிறது. அதை ஈடுகட்ட அவர் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே செழியன் மாலினி விவகாரம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்க, இந்த விஷயம் ஜெனிக்கு தெரிய வருகிறது.
மீண்டும் உயர துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.45,160க்கு விற்பனை!!
பாக்கியா உண்மையை மறைத்துவிட்டார் என்ற கோவத்தில் ஜெனி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். இந்நிலையில் ஈஸ்வரியும் பாக்கியாவும் ஜெனியை அழைக்க வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே ஜெனி என் நிலைமையில் நீங்களும் இருந்துள்ளீர்கள், நீங்கள் தள்ளி இருந்தது போல நானும் பிரிந்து இருக்க நினைக்கிறன் என சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.