மீண்டும் உயர துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.45,160க்கு விற்பனை!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிந்ததையொட்டி மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கத்தின் விலை ஓரளவுக்கு குறைந்து வந்தது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6085க்கும், சவரனுக்கு ரூ.48,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5615க்கும், சவரனுக்கு ரூ.44,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் நாளை (நவ.16) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6115க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.48,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ. 5645க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று நாளில் ரூ.1.70 காசுகள் உயர்ந்து ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.