மீன் பிடிக்க தடை – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. நலத்துறை உத்தரவு!
தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் உயர துவங்கிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.45,160க்கு விற்பனை!!
மேலும் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் கீழக்கரை, ஏர்வாடி, சோளியங்குடி, தொண்டி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.