நாய்கடிக்கு ரூ.20,000 வரை நிவாரணம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் பட்சத்தில் ரூ.20,000 வரையிலும் அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாய்க்கடி:
இந்தியா முழுவதும் தெருக்களில் சுற்றுத்திரியும் நாய்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொதுமக்களை தெருநாய்கள் கடித்தால் அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோருக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. நலத்துறை உத்தரவு!
அதாவது, பொதுமக்களை தெருநாய்கள் கடிக்கும் பட்சத்தில் தோளில் இருந்து சதை பிய்ந்து 0.2செ.மீ அளவுக்கு பல் பதிந்திருந்தால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்சமாக ரூ.20,000 வரையிலும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், லேசான பல் தடம் பதிந்திருந்தால் ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளான 4 மாதத்திற்குள் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.