மீனாவிற்கு துணை நிற்கும் ஸ்ருதி.. கடுப்பான ரோகிணி – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், ஸ்ருதி வீட்டிற்கு வந்ததும், மீனா படும் கஷ்டங்களை பார்த்து அவர் குரல் கொடுக்க இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், மீனாவை வீட்டில் வேலைக்காரி மாதிரி நடத்தி விஜயா அவமானப்படுத்துகிறார். அதை எல்லாம் பார்த்து ரோகிணி சந்தோசப்படுகிறார். தன்னுடைய அம்மாவின் உயிரை மீனா தான் காப்பாற்றியது என தெரிந்தும் கூட ரோகிணி மீனா கஷ்டப்பட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ஸ்ருதி அப்படி இருக்கவில்லை. மீனா வீட்டில் எல்லா வேலைகளையும் பார்க்க ஸ்ருதி அவருக்கு குரல் கொடுக்கிறார்.
மீண்டும் அதிரடி வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!
அதாவது எல்லாரும் தான் வேலைக்கு போறோம், ஆனால் மீனா எல்லா வேலைகளையும் பார்ப்பது சரி இல்லை எனவே எல்லாரும் சேர்ந்து வேலை செய்வோம் என ஸ்ருதி சொல்கிறார். ஆனால் ரோகிணி அதெல்லாம் முடியாது என சொல்கிறார். உடனே ஸ்ருதி அப்போ நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பேன் என சொல்ல, பணம் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தால் விஜயா என்ன சொல்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.