மீண்டும் அதிரடி வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!

0
மீண்டும் அதிரடி வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை - இன்றைய அப்டேட்!
மீண்டும் அதிரடி வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை - இன்றைய அப்டேட்!
மீண்டும் அதிரடி வேகத்தில் உயர்ந்துள்ள தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது மீண்டும் அதிரடி வேகத்தில் இன்று உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் மீண்டும் கலக்கத்தில் உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை:

ஆபரண தங்கத்தின் விலை என்ன நிலவரங்களில் உள்ளது என்பதை மக்கள் தினசரி உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு தான் நகைகளை வாங்க மக்கள் திட்டமிட்டு கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை ஆனது நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதன்படி நேற்றைய விலையை விட சவரனுக்கு இன்று ரூபாய் 80 உயர்ந்து தங்கம் விலை விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 640க்கும், ஒரு கிராம் ரூபாய் 5830-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் இன்று (டிச. 15) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

குறிப்பாக 24 கேரட் தங்கம் 50,400-க்கும், ஒரு கிராம் ரூபாய் 6300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளியின் விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 80.50க்கும், ஒரு கிலோ ரூபாய் 80 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் என்பது வணிக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!