தமிழகத்தில் இன்று (டிச. 15) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (டிச.15) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை நிலவரம்
தமிழகத்தில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்யின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. ஆனால் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் இன்று (டிச. 15) பெட்ரோல் டீசல் விலை குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அதன் படி சென்னையில் தொடர்ந்து 573-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.