ரவி ஸ்ருதி இடையே வந்த பிரிவு.. அதனால் வரும் அடுத்த பிரச்சனை – “சிறகடிக்க ஆசை” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், ரவி ஸ்ருதி இடையே கல்யாணம் ஆன பின் பல மாறுபாடுகள் வர, அவர்கள் பிரிந்துவிடுவார்களா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில், ரவி ஸ்ருதி கல்யாணத்தால் முத்து குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் ரவி ஸ்ருதியை நன்றாக பார்த்துக் கொண்டாலும், ஸ்ருதி செய்யும் சில வேலைகள் ரவிக்கு பிடிக்காமல் இருக்கிறது. அவரும் பல விஷயங்களை பொறுத்து கொள்ள, ஆனால் ஸ்ருதி சின்ன விஷயம் கூட சரியாக செய்யாமல் இருக்கிறார். அதனால் இருவருக்கும் பிரிவு அதிகமாகி கொண்டே வருகிறது.
சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ. 600க்கு விற்பனை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
ஒரு கட்டத்தில் ரவி பொறுமையை இழக்க, அது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. அதனால் ஸ்ருதி கோவித்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கே எனக்கு ரவியை பிடிக்கவில்லை, இனிமேல் அவனுடன் வாழ மாட்டேன் என சொல்கிறார். உடனே ஸ்ருதி அம்மா அப்பா இதையே காரணமாக வைத்து அண்ணாமலையை பழி வாங்க திட்டமிடுகின்றனர். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.