சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ. 600க்கு விற்பனை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மானியத்துடன் சேர்த்து ரூ.600-க்கு பெறலாம்.
சிலிண்டரின் விலை:
இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு மானியத்துடன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்நாட்டில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918க்கும், வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.57 குறைந்து ரூ.1,942க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மானியம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான SMS வந்துருச்சா? உடனே பாருங்க!
இதனையடுத்து பொது மக்கள் வீட்டு உபயோக சிலிண்டரை ரூ.300 மானியத்துடன் சேர்த்து ரூ.600க்கு பெறலாம்இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.