
ICSI நிறுவனத்தில் Executive ஆக பணிபுரிய வாய்ப்பு – ரூ.60,000/- மாத ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
IEPFA Executives பணிக்கு என IEPFA நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது Institute of Company Secretaries (ICSI) நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Institute of Company Secretaries (ICSI) |
பணியின் பெயர் | IEPFA Executives |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSI IEPFA பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, IEPFA Executives பணிக்கு என 05 பணியிடங்கள் IEPFA நிறுவனத்தில் காலியாக உள்ளது.
IEPFA Executives பணிக்கான தகுதி:
IEPFA Executives பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ISCI நிறுவனத்தில் Member ஆக இருக்க வேண்டும்.
IEPFA Executives அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
IEPFA Executives வயது வரம்பு:
IEPFA Executives பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.11.2023 அன்றைய தேதியின் படி, 34 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
ICSI IEPFA மாத சம்பளம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Repco ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,50,000/- ஊதியம்!
ICSI IEPFA தேர்வு முறை:
IEPFA Executives பணிக்கு தகுதியான நபர்கள் Interview, Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICSI IEPFA விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 20.11.2023 அன்று முதல் 30.11.2923 அன்று வரை https://www.icsi.in/recruitmentIEPFA/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.