விஜய் டிவியில் Mr and Mrs சின்னத்திரை ஓவர்.. அதற்கு பதிலாக களமிறங்கும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி!

0

விஜய் டிவியில் சாமானிய மக்களின் திறமையை வெளிப்படுத்தும் ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன், விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சி பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பதிலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

சூப்பர் சிங்கர் சீசன் 9:

தமிழ் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக சாமானிய மக்களின் திறமையை வெளிப்படுத்துவதில் விஜய் டிவி முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் பல சீசன்களை கடந்தும் இன்னும் விஜய் டிவியில் மக்களின் ஆதரவை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சூட்டோடு சூடாக பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜிபி முத்து.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த சீசனில் நடுவர்களாக அனுராதா , உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த 8 சீசன்களை போல இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்ச்சி Mr and Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சிக்கு பதிலாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் Mr and Mrs சின்னத்திரை கிராண்ட் பைனல் வர இருப்பதால் ரசிகர்கள் வெற்றியாளர் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!