
மாலினியால் மோசமாகும் பாக்கியா நிலைமை.. ஈஸ்வரிக்கு கிடைத்த பதிலடி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், மாலினி ஜெனியிடம் பொய்க்கு மேல் பொய்யாக சொல்ல, பாக்கியாவும் செழியனும் அமைதியாக இருக்கின்றனர். உடனே ஈஸ்வரி பாக்கியா மீது கோபப்படுகிறார். பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், மாலினி செழியனை மாட்டிவிட நினைத்து பொய்க்கு மேல் பொய்யாக சொல்ல, அதை எல்லாம் நம்பிய ஜெனி இனிமேல் இந்த வீட்டில் இருக்கவே மாட்டேன் என சொல்லி கிளம்பி செல்கிறார். இந்நிலையில் மாலினி சொன்ன பொய்களை எல்லாம் நம்பி ஈஸ்வரி பாக்கியா மீது கோபப்படுகிறார். அப்போதும் பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார்.
தமிழகத்தில் நவ.09 ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் இதோ!
அடுத்து வரும் எபிசோடுகளில் ஈஸ்வரி பேச்சை நிறுத்த பாக்கியா பேச இருக்கிறார். அதாவது உங்க மகன் செய்த காரியத்தால் தான் என் மகன் இப்படி செய்கிறான் என பாக்கியா சொல்ல, ஈஸ்வரியால் எதுவும் பேச முடியவில்லை. இதில் இருந்து மீண்டு வர என் மகன் முயற்சி செய்தும் மாலினி தான் விடவில்லை என பாக்கியா உண்மையை சொல்கிறார்.