உச்சத்தை தொட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை – கதிகலங்கும் பொதுமக்கள்!!
அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்தியாவசிய பொருள்:
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது வெங்காயம், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், பொருட்களின் வரத்து குறைந்ததை காரணம் காட்டி சூப்பர் மார்க்கெட் மற்றும் வெளி சந்தைகளில் அனைத்து அத்தியாவசிய சமையல் பொருட்களும் அநியாய விலையில் விற்கப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.12,000 நிதியுதவி – அசத்தல் அறிவிப்பு!
அத்தியாவசிய பொருள் என்பதால் தவிர்க்க முடியாமல் வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளை கொண்டைக்கடலை கிலோ ரூ.110 லிருந்து அதிரடியாய் ரூ.190வரையிலும், துவரம்பருப்பு ரூ.115 லிருந்து ரூ.180க்கும், பெரிய வெங்காயம் ரூ.68க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.