அடுத்தடுத்து வெளியாகும் அகவிலைப்படி தகவல் – ‘இவர்களுக்கு’ வந்த மகிழ்ச்சியான செய்தி!
ஜார்கண்ட் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, ஒடிசா, உத்தரபிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைப்படியை உயர்த்தி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்த அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சத்தை தொட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை – கதிகலங்கும் பொதுமக்கள்!!
இந்த அகவிலைப்படி உயர்வானது 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜார்க்கண்டின் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் முக்ய மந்திரி உஜ்வல் ஜார்கண்ட் யோஜனா என்ற திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.