குடும்பத் தலைவிகளுக்கு ரூ.12,000 நிதியுதவி – அசத்தல் அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் பாஜக தரப்பிலான தேர்தல் வாக்குறுதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக 7ம் தேதி மற்றும் 17ஆம் தேதி அன்று மாநில சட்டமன்ற தேர்தல் 90 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெளியிடப்படும். தேர்தல் நெருங்கி உள்ளதால் தற்போது அனைத்து கட்சிகளின் சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆதார் இருந்தால் குறைந்த விலையில் வெங்காயம் – கிலோ ரூ. 25 மட்டுமே!
அந்த வகையில் பாஜக இன்று தனது தேர்தல் வாக்குறுதியில், மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12000 நிதி உதவி, சத்தீஸ்கரில் ஒரு குவிண்டால் நெல் ரூபாய் 3100-க்கு கொள்முதல், மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டு ரூபாய் 10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.