ஆதார் இருந்தால் குறைந்த விலையில் வெங்காயம் – கிலோ ரூ. 25 மட்டுமே!
இந்தியாவில் பருவமழை காரணமாக வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி மக்கள் குறைந்த விலையில் வெங்காயத்தை பெற்று வருகின்றனர்.
வெங்காயம் விற்பனை:
இந்தியாவில் கடந்த மாதங்களில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் தற்போது வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கிலோ ரூ.100 – ஐ தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்ததால் பொது மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் வாயிலாக குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு புதிய வசதி அறிமுகம் – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து ரேஷன் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.25-க்கு பெற்று வருகின்றனர். இது குறித்து பேசிய அதிகாரிகள் வெங்காயம் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் சந்தைகளிலும் கடைகள் அமைத்து வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.