ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் வசூல் – போஸ்ட் ஆஃபீஸின் அட்டகாசமான திட்டம்!!
குறுகிய காலத்திலேயே முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக்கும் அட்டகாசமான சேமிப்பு திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ் திட்டம்:
வங்கி கணக்குகளை காட்டிலும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் (KVP) முதலீட்டாளர்களுக்கு ஆண்டிற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விரும்பிய தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் முதலீடு செய்த தொகை 115 (9 ஆண்டு 7 மாதம்) மாதங்களில் இரட்டிப்பாகும்.
ஆதார் இருந்தால் குறைந்த விலையில் வெங்காயம் – கிலோ ரூ. 25 மட்டுமே!
உதாரணமாக, முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 115 – ஆவது மாதத்திற்கு பிறகு ரூ. 20 லட்சமாக பெற்று கொள்ளலாம். இதே போல, உங்களால் இயன்ற தொகையை முதலீடு செய்து குறுகிய காலத்திலேயே இரட்டிப்பு லாபத்தை பெற்று பயனடையுங்கள். இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இணைய விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு சென்று பணத்தை முதலீடு செய்து லாபத்தை பெற தயாராகுங்கள்.