இன்று நாடு முழுவதும் தொடங்கியது UPSC Mains சிவில் தேர்வு..!! ” தமிழக தேர்வாளர்கள் மட்டுமே இவ்வளவு பேரா”..??
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது IAS, IFS, IPS, IIS, IAAS மற்றும் IRS உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளின் காலியிடங்களை நிரப்புவதற்காக சிவில் சர்விஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமீபத்தில், 1056 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக Preliminary தேர்வு நடத்தியதில் இருந்து , 14,627 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், அதில் 650 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள 24 மையங்களில் UPSC மெயின்ஸ் தேர்வானது இன்று செப்டம்பர் 20 தொடங்கி செப்டம்பர் 29 தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



























