உங்கள் பணத்தை மோசடிகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமா ..!! அப்போ உடனே இந்த முறையை ஃபாலோவ் பண்ணுங்க..!!
தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் மோசடிகளும் அதிக அளவில் நடக்கிறது . இதனால், மக்கள் அவர்களின் பணத்தை ஆன்லைனிலும் , ஆஃப்லைனிலும் அதிகமாக இழக்கின்றனர். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
கிரெடிட் கார்டு பணமோசடிக்கான வழிமுறை:
1. உங்கள் கணக்கின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதாவது, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை அல்லது பிற கட்டணங்கள் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக ஆஃப்லைன் ரசீதை பெற வேண்டும்.
2. நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது “HTTPS என்ற பாதுகாப்பு கொண்ட இணையதளங்களில் மட்டுமே ஷாப்பிங் செய்ய வேண்டும்.
3. தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்து உங்களுடைய வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை பதிவிட கூடாது.
4. கிரெடிட் கார்டு பரிவர்த்தனை செய்யும் போது அது குறித்த விவரங்கள் நம்முடைய மொபைல் போனிற்கு வரும் படி NOTIFICATION-யை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்..
5.கிரெடிட் கார்டை பொது இடத்தில் பயன்படுத்தும் போது , பிறர் பார்க்காத வகையில் பயன்படுத்த வேண்டும் மற்றும் வங்கி அறிக்கைகள், தனிப்பட்ட தகவல்களை தூக்கி எறிவதற்கு முன் அவற்றை பிறருக்குத் தெரியாத வண்ணம் அகற்ற வேண்டும். இத்தகைய வழிமுறைகள் பின்பற்றினால் பணமோசடியில் இருந்து நீங்கள் தப்பித்து கொள்ளலாம்



























