UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – கல்வி, வயது… விவரங்கள் இதோ!

0
UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - கல்வி, வயது... விவரங்கள் இதோ!
UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – கல்வி, வயது… விவரங்கள் இதோ!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் (CISF) 2024ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Assistant Commandant பணிக்கான காலியிடங்கள் துறை சார்ந்த போட்டி தேர்வு அதாவது UPSC CISF AC (EXE) LDCE 2024 Exam வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.12.2023 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. எனவே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறவும்.

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC CISF பணியிடங்கள்:

UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு மூலம் CISF நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Commandant (Executive) பணிக்கான 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Assistant Commandant (Executive) கல்வி விவரம்:

Assistant Commandant (Executive) பணிக்கான போட்டித் தேர்வுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Assistant Commandant (Executive) அனுபவ விவரம்:

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் காவல் துறையில் Sub. Inspector (GD) அல்லது Inspector (GD) பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Assistant Commandant (Executive) வயது விவரம்:

இந்த UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வுக்கு 01.08.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1989 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

PSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு நடைபெறும் முறை:
  • Written Examination
  • Physical and Medical Standard Test
  • Personality / Interview
PSC CISF AC (EXE) LDCE 2024 எழுத்து தேர்வு விவரங்கள்:
  • Assistant Commandant (Executive) பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வின் முதல் நிலையான எழுத்து தேர்வானது 10.03.2024 அன்று நடைபெறவுள்ளது.
  • இத்தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
  • Paper I ஆனது Objective Type தேர்வு முறையில் 300 மதிப்பெண்களுக்கு என 2 1/2 மணி நேரம் நடத்தப்படும்.
  • Paper II ஆனது Essay, Precis Writing and Comprehension தேர்வு முறையில் 100 மதிப்பெண்களுக்கு என 2 மணி நேரம் நடத்தப்படும்.

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் பணி!

PSC CISF AC (EXE) LDCE 2024 விண்ணப்பிக்கும் விதம்:

இந்த UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 29.11.2023 அன்று முதல் 19.12.2023 அன்று வரை https://upsconline.nic.in/upsc/OTRP/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notificaiton Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!