இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் – வெளியான ஆய்வு தகவல்!

0
இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் - வெளியான ஆய்வு தகவல்!
இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் - வெளியான ஆய்வு தகவல்!
இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் – வெளியான ஆய்வு தகவல்!

கச்சா எண்ணெய் விற்பனை குறித்து ப்ளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு தகவல்:

ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையை சவுதி அரேபியா அரசு ஆசிய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவுகோலான பிரண்ட் கச்சா எண்ணெய் துபாய் பெஞ்ச் மார்க் உடன் சமமாக இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கு அல்லாத எண்ணெய் வரத்து குறைகிறது.

தமிழகத்தை அச்சுறுத்தும் மர்ம வைரஸ்? – அமைச்சர் சொன்ன தகவல்!

2024 பிப்ரவரியில் டெலிவரி செய்யப்படும் அரபு லைட் பீபாய்க்கு சராசரி விலை குறைப்பு கணிசமாக 1.05 டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஆசிய வாடிக்கையாளர்களுக்காக சவூதி அரேபியா விலையை உயர்த்தி வருகிறது. தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடம் முதல் விலை குறைவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!