தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (08-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (08-05-2025) திருவாரூர், சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவாரூர்:
பாகசாலை, தேதியூர், நீலக்குடி, செல்வபுரம், மூலங்குடி, முன்னாவல்கோட்டை, நத்தம், அய்யம்பேட்டை, எடகீழையூர்.
சென்னை:
வள்ளுவர் சாலை, பஜனை கோயில் தெரு, பாரதி சாலை, ஸ்ரீராம் நகர், கோத்தாரி நகர், ரத்னா வளாகம், குறிஞ்சி நகர், முகலிவாக்கம், சாந்தி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சுபஸ்ரீ நகர், AGS காலனி, கணேஷ் நகர்.
தஞ்சாவூர்:
வடுவூர், வடபாதி, கீழையூர், கோயில்வெண்ணி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.


























