வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி… பதிலடி கொடுத்த உதயநிதி.. விவரம் உள்ளே!!
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக்டோபர் 15) முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கனமழை, சாலைகளில் தேங்கிய மழைநீர் , பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், இன்று லேசான மழை தான் பெய்து வருகிறது. கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், சென்னையில் எங்கும் வெள்ளம் தேங்காமல் வடிந்திருப்பதே பழனிசாமிக்கான வெள்ளை அறிக்கை என அவர் பதிலடி கொடுத்தார்.


























