TVS மோட்டார்ஸ் தொழிற்சாலையின் புதிய அப்டேட் வந்தாச்சு…!! ” இனி, எல்லாமே இங்க இருக்கும்”..!!
தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக தனது தொழிற்சாலைகளை மறு சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவு படுத்தும் பணியில் களமிறங்கி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ஓசூரில் உள்ள TVS மோட்டார்ஸ் ஆனது, 3.28 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலையை ரூ.120 கோடி முதலீட்டில், 5.22 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்துவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. மேலும், இங்கு வாகனங்கள் பார்க் செய்யும் வசதி, அலுவலக கட்டிடம் மற்றும் ஆய்வக வசதி போன்றவை அமைக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


























