
பெண்களுக்கு சூப்பர் நியூஸ்….மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேரணுமா..?? ” அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க”…!!
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட “மகளிர் உரிமை தொகை” என்ற திட்டத்தின் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு குடும்ப தலைவிகள் பயன் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தற்போது இந்த திட்டத்தை விரிவு படுத்தி சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்…வந்தாச்சு மீண்டும் ஒரு IT பார்க்…!! ” எந்த மாவட்டம்-னு தெரியுமா”..??
“மகளிர் உரிமை தொகை” திட்டத்தில் இணைய வேண்டும் என்றால், சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, ஆண்டு வருமானம் ஏறத்தாழ ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சொந்தமாக 4 சக்கர வாகனங்களை வைத்திருக்க கூடாது, அரசு துறையில் பணியாற்றுபவர்களாக இருக்க கூடாது, வேறு ஏதேனும் ஒரு திட்டத்தில் உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், வரும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அக்கட்சி தலைமை நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த திட்டத்தில் புதிதாக திருமணம் ஆகி குடும்ப தலைவிகளாகும் பெண்களும் மற்றும் அரசு துறையில் பணியாற்றிய கணவனை இழந்த பெண்களும் இந்த மகளிர் உரிமை திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


























My application of magalir uremai thogai is rejected so I will from new application pls proced my application thank u