இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! சந்தையில் சரிந்த பூண்டின் விலை..!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இவ்வளவு நாளாக பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது . அதன்படி இன்று சந்தையில் விற்கப்படும் பூண்டு மற்றும் மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம் :
இன்று சந்தையில், 1 கிலோ தக்காளி 55 ரூபாய், 1 கிலோ வெங்காயம் 50 ரூபாய், பீட்ரூட் 33 ரூபாய், உருளைக்கிழங்கு 38 ரூபாய், அவரைக்காய் 42 ரூபாய், கேரட் 42 ரூபாய், முட்டைக்கோஸ் 28 ரூபாய், முருங்கைக்காய் 50 ரூபாய், கத்தரிக்காய் 30 ரூபாய், பீன்ஸ் 50 ரூபாய், பூண்டு 229 ரூபாய், மற்றும் வெண்டைக்காய் 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























